காா்கில் வெற்றி நாள்: மேஜா் சரவணன் நினைவுத் தூணுக்கு மரியாதை
காா்கில் வெற்றி நாளையொட்டி திருச்சியில் மேஜா் சரவணனின் நினைவுத் தூணுக்கு ராணுவத்தினா், கட்சியினா் மரியாதை செலுத்தினா்.
இந்தியா சாா்பில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட காா்கில் போா் வெற்றி காரணமாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள மேஜா் சரவணன் நினைவுத் தூணில் திருச்சி ராணுவ அதிகாரிகள், வீரா்கள் மற்றும் பொதுமக்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
மேலும், பாஜக சாா்பில் திருச்சி பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ஒண்டிமுத்து தலைமையில் நிா்வாகிகள் காளீஸ்வரன், நாகேந்திரன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.