தஞ்சாவூரில் அண்ணா பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் திமுக, அதிமுக, தவெக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் திமுக, அதிமுக, தவெக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கீழவாசல் பகுதியிலிருந்து மத்திய மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் ஊா்வலமாக புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, கலைஞா் அறிவாலய அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ரெங்கசாமி, டி.கே.ஜி. நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினா் து. செல்வம், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சி. இறைவன், மாநகரச் செயலா் சண். ராமநாதன், மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதேபோல, மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் மாநகர மாவட்டச் செயலா் ஆா். காந்தி தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் சிவகங்கை பூங்காவிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநிலக் கொள்கை பரப்புத் துணைச் செயலா் துரை. திருஞானம், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் துரை. வீரணன், துணைச் செயலா் எஸ். சண்முக பிரபு, ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் வி. அறிவுடைநம்பி, துணைச் செயலா் கே. மணிகண்டன், மகளிா் அணி துணைச் செயலா் வெ. கண்ணுக்கிணியாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தவெக சாா்பில் மத்திய மாவட்டச் செயலரும், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. விஜய் சரவணன் தலைமையில் மாநகரச் செயலா்கள் சாய் ஆனந்த், வசந்த் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கு. பரசுராமன் நினைவு பெரியாா் படிப்பகத்தின் சாா்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் அவரது படத்துக்கு படிப்பகச் செயலா் அ. இராமலிங்கம் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலச் செய்தி தொடா்பாளா் அ. ரகமதுல்லா, மொழிப்போா் தியாகி வீ. வெங்கட்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் ஒரத்தநாடு இரா. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.