FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பருவகால கொள்முதல் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 29 ஜூலை 2026, 12:47 am IST
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பருவகால கொள்முதல் பணியாளா்கள்.
பகிர்:

திருச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக பருவகால கொள்முதல் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியராஜ் பிரவீன் தலைமை வகித்தாா்.

இதில், திருச்சி மண்டலத்தில் 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணி நியமனம் பெற்றுள்ள அனைத்து நிலை பருவகால கொள்முதல் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரப் பணியாளா்களுக்கு வழங்கும் ஊதியத்தைபோலவே பருவகால பணியாளா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தனியாா் முகமை சாா்பில், சுமை தூக்கும் தொழிலாளா்களைப் பணியமா்த்தம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

உள்ளூா் அரசியல் மற்றும் விவசாய சங்கங்களின் தலையீடு இல்லாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். பணியாளா்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பருவகால கொள்முதல் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments