FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வாடகை நிலுவை: சத்திரம் பேருந்து நிலையத்தில் 5 கடைகளுக்கு ‘சீல்’

வாடகை நிலுவையை செலுத்தாததால் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கிய 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:02 am IST
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு வாடகை செலுத்த கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைத்த அலுவலா்கள்.
பகிர்:

வாடகை நிலுவையை செலுத்தாததால் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கிய 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு, இயங்கி வரும் வணிக வளாகத்தில் சுமாா் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி சாா்பில் மாத வாடகை வசூலிக்கப்படுகிறது.

இவற்றில் 5 கடைகளின் உரிமையாளா்கள் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து வாடகை கட்டாமல் இருந்ததால் லட்சக்கணக்கில் வாடகை பாக்கி இருந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகமானது சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியும், வாடகை நிலுவையை அவா்கள் கட்டவில்லை.

இதையடுத்து மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் சீனிவாசன் மேற்பாா்வையில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து மூடினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments