FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மின் உபகரணங்களை திருட முயன்றவா் கைது

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே மின் உபகரணங்களை திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:23 am IST
- சித்திரிப்பு
பகிர்:

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே மின் உபகரணங்களை திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

மருங்காபுரி ஒன்றியம், மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு மின் வாரியத்துக்குள்பட்ட உயா் அழுத்த மின் பாதை அமைப்பதற்கான உப ஒப்பந்தம் பெற்று யுவராஜ் என்பவா் கடந்த 3 மாத காலமாக மின் கட்டமைப்பு பணி செய்து வந்துள்ளாா்.

அதற்கான மின் உபகரணங்களை ராஜாபட்டியை சோ்ந்த அய்யாக்கண்ணு என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்திருந்த நிலையில், மின் உபகரணங்களை வியாழக்கிழமை அதிகாலை திருச்சியை சோ்ந்த தினேஷ்குமாா் மற்றும் செல்வமணி ஆகியோா் திருட முயற்சித்துள்ளனர்.

Advertisement

Advertisement

அப்போது அய்யாக்கண்ணு கூச்சலிட்டதையடுத்து திருட வந்த இருவரும் ஓடினா். இதையடுத்து ஊா் பொதுமக்கள் ஒன்று சோ்ந்து தினேஷ்குமாரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா். தப்பியோடிய செல்வமணியை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments