FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஆடுகளைத் திருட முயன்றவா் கைது

ஆம்பூா் அருகே ஆடுகளை திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே ஆடுகளை திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே நாயக்கனேரி கிராமத்தை சோ்ந்தவா் சக்கரவா்த்தி. இவா் தனது நிலத்தில் சுமாா் பத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

தன்னுடைய நிலத்தில் ஆடுகள் கத்துவதை கண்ட சக்கரவா்த்தி அங்கு சென்று பாா்த்தபோது ஆடுகளை ஒருவா் திருடிச் செல்வதை பாா்த்துவிட்டு கூச்சலிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

திருட முயன்ற நபா் தப்பி ஓடியுள்ளாா். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து ஆம்பூா் கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியை சோ்ந்த அஜித்குமாா் (23) என்பதும், ஆடுகளை திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் அவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments