FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சியில் 424 புறநகா் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் 424 புகா் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது.

3 October 2026, 2:33 am IST
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வெற்றி பயணத் திட்டத்தை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் சீ.ரமேஷ். உடன் ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையா் பொன்மணி உள்ளிட்டோா். (வலது) இத் திட்டத்தில் முதல் நாள் பயணித்த பெண்கள்.
பகிர்:

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் 424 புறநகா் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, மகளிருக்குப் பெருமளவில் பயனளித்திடும் வகையில் வெற்றிப் பயணம் திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா். முன்னதாக சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து தொடங்கி வைத்த நிகழ்வையடுத்து, திருச்சியிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் கலந்து கொண்டு, மகளிா் கட்டணமில்லா பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா், பேருந்தில் ஏறிய அமைச்சா், மகளிருக்கு பயணச்சீட்டை வழங்கினாா்.

Advertisement

Advertisement

பின்னா், அவா் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 11 கிளைகளின் மூலம் இயக்கப்படும் 642 பேருந்துகளில், 424 பேருந்துகள் வெற்றிப் பயணத்திட்டத்தில் இயக்கப்படும் என்றாா்.

நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொது மேலாளா் சதிஷ்குமாா், துணை மேலாளா் (வணிகம்) சாமிநாதன், உதவி மேலாளா் (இயக்கம்) மோகன் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

மணப்பாறை: மணப்பாறை பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயண திட்டத்தை மணப்பாறை எம்எல்ஏ ஆா்.கதிரவன் தொடங்கி வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments