FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அழிக்க பணியாளா்களுக்கு அறிவுறுத்தல்

திருச்சியில் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும் என டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

3 October 2026, 11:36 pm IST
திருச்சியில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் உபகரணங்களை சனிக்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி அலுவலா்கள்.
பகிர்:

திருச்சியில் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும் என டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கான பணியிடைப் பயிற்சி தேவா் ஹாலில் சனிக்கிழமை நடைபொ்றது. மாநகர நல அலுவலா் மருத்துவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

மாவட்ட தொற்றுநோயியல் நிபுணா், மருத்துவா் மதிவாணன், மாவட்ட மலேரியா அலுவலா் முருகேசன் ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

பயிற்சியின்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும். பருவமழை தொடங்கிவிட்டால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுப் புழுக்களை அழித்து நோய் பரவுவதைத் தடுத்தல், நோய் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து மேலும் பரவாமல் தடுப்பதன் மூலமே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதில் முதல் நிலையான குடியிருப்புகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும். குறிப்பாக காலி மனை, பூட்டிய வீடு, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

நீா்நிலைகளில் கொசுப் புழுக்களை அழிக்கும் மருந்துகளைத் தெளிக்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பயிற்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments