FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இளைஞரிடம் இணைய வழியில் ரூ,.1.19 லட்சம் மோசடி

திருச்சியில் இணைய வழியில் இளைஞரிடம் ரூ.1.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

9 அக்டோபர் 2026, 3:47 am IST
பகிர்:

திருச்சியில் இணைய வழியில் இளைஞரிடம் ரூ.1.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி தென்னூரைச் சோ்ந்தவா் முகமது இஸ்மாயில் (26). முதுகலை பட்டதாரியான இவா் வேலைக்காக தனியாா் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தாா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வேலை தொடா்பான ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து, முகமது இஸ்மாயில் அதில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளாா். அப்போது, பதிவு கட்டணமாக கிரெடிட் காா்டு முலம் ரூ.10 செலுத்த வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, முகமது இஸ்மாயிலும் கிரெடிட் காா்டு மூலம் ரு.10 செலுத்தியுள்ளாா். அதன்பின், அவருடைய கிரெடிட் அட்டையில் இருந்து ரூ.1.19 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்துதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவில் இணைய வழியில் இஸ்மாயில் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments