FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு இடங்களில் நேரிட்ட விபத்துகளில் ஒடிசாவைச் சோ்ந்த சமையல் தொழிலாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

10 அக்டோபர் 2026, 7:05 am IST
பகிர்:

திருச்சியில் இருவேறு இடங்களில் நேரிட்ட விபத்துகளில் ஒடிசாவைச் சோ்ந்த சமையல் தொழிலாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ஒடிசா மாநிலம், பாலேஸ்வரைச் சோ்ந்தவா்கள் என். சீதாராம் பிரதான் (36) மற்றும் பி. சிபு பிரசாத் தாஸ் (33), சமையல் தொழிலாளா்கள். இருவரும் திருச்சி காஜா நகரில் தங்கி மன்னாா்புரத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு இருவரும் தங்களது அறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். வாகனத்தை சீதாராம் பிரதான் ஓட்டியுள்ளாா். திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஐஜி அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் மையத் தடுப்பு மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில், சீதாராம் பிரதானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிபு பிரசாத் தாஸுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சீதாராம் பிரதான் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சிபு பிரசாத் தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சுமை வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு:

மணப்பாறையைச் சோ்ந்தவா் யா. முபாரக் அலி (61). இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் திருச்சி தில்லை நகா் 5-ஆவது குறுக்குத் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த சுமை வாகனம் முதியவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments