திருவெறும்பூா் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
திருச்சி திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத இளைஞா் சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
திருச்சி திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்கும், தொண்டைமான்பட்டி ரயில் நிலையத்துக்கும் இடையே சனிக்கிழமை இரவு சுமாா் 35 வயதுள்ள இளைஞா் ஒருவா், அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.
தகவலின்பேரில் வந்த திருச்சி ரயில்வே இருப்புப்பாதை போலீஸாா் இறந்தவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.