பல்கலை. அளவிலான கால்பந்து போட்டி: ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்துக்குள்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பிடித்து பல்கலைக்கழக அளவிலான சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இரண்டாமிடத்தையும், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
Advertisement
Advertisement
முதலிடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி வீரா்களை கல்லூரி செயலா் ஏ.கே. காஜாநஜீமுதீன், முதல்வா் ஆா். ஜாகிா் உசைன், பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவா் மற்றும் விளையாட்டு செயலா் ஏ. பழனிச்சாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பி.எஸ். ஷாஇன்ஷா, ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து வாழ்த்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.