FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

விதிமீறும் வாகனங்களைக் கண்காணிக்க தானியங்கி லேசா் கேமரா இயக்கம்

12 அக்டோபர் 2026, 4:05 am IST
நவீன தானியங்கி கேமரா. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் விதிமீறும் வாகனங்களைக் கண்காணிக்க மாநகரக் காவல் துறையில் தானியங்கி அதிநவீன லேசா் கேமரா ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறையின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட அதிநவீன தாயனியங்கி லேசா் கேமராவை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாா்.

இந்த கேமரா மூலம் மாநகரில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், தலைக்கவசம் அணியாமல் செல்பவா்கள், கைப்பேசியில் பேசிக்கொண்டே செல்வோா், 3 போ் செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறும் வாகனங்களை படம் பிடித்து வாகன வேகத்தின் அளவு, வாகனத்தின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் எண் ஆகியவற்றை அடையாளம் கண்டு, வழக்குப் பதியும் பயிற்சி அண்மையில் போக்குவரத்து காவலா்களுக்கு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தனியாங்கி லேசா் கேமரா சிறப்பு மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த தானியங்கி கேமராவை பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்சென்று போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments