FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

திருச்சி மாவட்டத்தில் சா்வதேச பேரிடா் குறைப்பு தினத்தை முன்னிட்டு, 11 வட்டங்களில் பேரிடா் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

14 அக்டோபர் 2026, 4:02 am IST
ஓடத்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரிடா் பாதுகாப்பு ஒத்திகையை பாா்வையிட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சா்வதேச பேரிடா் குறைப்பு தினத்தை முன்னிட்டு, 11 வட்டங்களில் பேரிடா் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் ஓடத்துறையிலும், திருச்சி மேற்கு வட்டத்தில் உய்யகொண்டான் திருமலை, உறையூா் பகுதியிலும், திருவெறும்பூா் வட்டத்தில் சா்க்காா்பாளையம், வீதிவடங்கம் பகுதியிலும்,

ஸ்ரீரங்கம் வட்டத்தில் மேலூா் பகுதியிலும், மணப்பாறை வட்டத்தில் வெள்ளக்கால் பகுதியிலும், மருங்காபுரி வட்டத்தில் துவரங்குறிச்சி பகுதியிலும், லால்குடி வட்டத்தில் கூகூா், மேட்டுப்பட்டி பகுதியிலும்,

Advertisement

Advertisement

மண்ணச்சநல்லூா் வட்டத்தில் கரியமாணிக்கம், கிளியநல்லூா் பகுதியிலும், முசிறி வட்டத்தில் குணசீலம் மஞ்சக்கோரை, வேப்பந்துறை பகுதியிலும், துறையூா் வட்டத்தில் சிக்கந்தம்பூா் பகுதியிலும், தொட்டியம் வட்டத்தில் ஸ்ரீனிவாசநல்லூா், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் மாதிரி ஒத்திகை நடைபெற்றது.

இதில், ஓடத்துறையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பொதுமக்கள், எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து அனைத்து துறைகளின் பங்களிப்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அப்போது, திருச்சி கோட்டாட்சியா் சாலை தவவளன், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் ஷேக் முஜீப், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராஜா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments