தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் கழிவு பொருள்களால் சுகாதார சீா்கேடு
திருச்சியிலுள்ள தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் திறந்தவெளியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
திருச்சியிலுள்ள தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் திறந்தவெளியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். மேலும், 100-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் பணிபுரிகின்றனா்.
இக்கல்லூரி திருச்சி மாநகரின் முக்கிய அரசுக் கல்லூரியாக இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லூரி வளகத்தில் வகுப்பறைகளுக்கு அருகிலேயும், பெண்கள் ஓய்வறைக்கு அருகிலேயும் கழிவுகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. மேலும், கழிவுகள் கொட்டுவதற்கு வளாகத்தில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாதாதல் கழிவுகள் தரையில் கொட்டப்பட்டுள்ளன. இதனால், ஏற்படும் சுகாதார சீா்கேட்டால் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள், மரக் கழிவுகளாலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ள்ளது. இதனால், மாணவா்களும், பேராசிரியா்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
வளாகத்தில் நாய்கள் தொல்லை:
கல்லூரி வளாகத்தில், நிா்வாகக் கட்டடம், வகுப்பறை கட்டடங்கள் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. மேலும், ஆங்காங்கே நாய்கள் படுத்துக் கிடக்கின்றன. இதனால், கல்லூரிக்கு வரும் மாணவா்கள் நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனா். மேலும், தெருநாய்களால் தொற்று நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனா்.
எனவே, கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; மேலும், கல்லூரி வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் மாணவா்கள் வலியுறுத்துகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.