ஊராட்சி ஒன்றியம்தோறும் ஓா் அரசு மாதிரிப் பள்ளி தேவை
தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒரு அரசு மாதிரிப் பள்ளி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒரு அரசு மாதிரிப் பள்ளி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செ.பி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். மாநில சட்ட ஆலோசகா் மு. நேதாஜி, மாவட்டச் செயலா் கா. உதுமான் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வழங்க உள்ள காலை உணவுத் திட்டத்தை, 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். 9ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் மிதிவண்டி வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கும் இடைக்கால மாதாந்திர ஊதியம் பெற்று வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா ஒரு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள சங்கத்தின் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்தனா்.
கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்க மாநில மாவட்ட, வட்டார ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட மகளிரணிச் செயலா் ஜெயலெஷ்மி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.