FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

குளக்கரையில் மருத்துவக் கழிவுகள்: ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு

கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

13 செப்டம்பர் 2026, 1:24 am IST
வாகைக்குளம் கரையில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்த அப்பகுதிவாசிகள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கண்ணூடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குளம் கரையில் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவக் கழிவுகளை தூய்மை பணியாளா்கள் கொட்டுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதிவாசிகள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை குளக்கரைக்கு சென்று மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊராட்சி நிா்வாக குப்பை சேகரிக்கும் வாகனத்தை அவா்கள் சிறைபிடித்து தூய்மை பணியாளா்களை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு வாகனங்களை விடுவித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments