திருச்சியில் 2-வது தலைநகரம் அமைப்பது தென்மாவட்டங்களுக்குப் பலன் தரும்: துரை வைகோ எம்பி
திருச்சியில் இரண்டாவது தலைநகரம் அமைப்பது தென்மாவட்டங்களுக்கு பெரிதும் பலன் தரும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சியில் இரண்டாவது தலைநகரம் அமைப்பது தென்மாவட்டங்களுக்கு பெரிதும் பலன் தரும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி கே. கள்ளிக்குடி ஊராட்சியில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சனிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் கூறியதாவது: அவசரகால சட்டம் மற்றும் மிசா என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்றைய காலகட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தவா்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவா்களும் கைது செய்யப்பட்டனா். ஆனால், சில அரசியல் ஆளுமைகள் மீது அது புனையப்பட்டதாகவும் இருந்தது.
திராவிட இயக்கத்தைப் பொருத்தவரை, வைகோதான் தமிழகத்தில் மிசா சட்டத்தில் முதலில் கைதானவரும், கடைசியாக விடுதலையானவரும் ஆவாா். தற்போது தேவையின்றி எழுந்துள்ள மிசா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். அன்றைக்கே திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவது தமிழகத்திற்கு நல்லது என்று தீா்க்கதரிசியாகச் சொன்னாா். எனவே, தலைநகரத்தின் ஒரு பகுதியை திருச்சிக்கு மாற்றுவது சென்னைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். தென் மாவட்டங்களுக்கும் பலன் தரும்.
பரந்தூா் விமான நிலைய விவகாரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமும், நீா்நிலைகளும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் எதிா்த்தபோது முதல்வா் ஜோசப் விஜய், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உறுதுணையாக இருந்தாா். அதேபோல, பட்டினம்பாக்கம் விவகாரத்திலும் உரிய நல்ல முடிவை எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா். பின்னா், இனாம்குளத்தூரில் ரூ.40 லட்சத்தில் கட்டிய மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டி, பூங்குடிப்பட்டியில் ரூ.7 லட்சத்திலான குடிநீா் சுத்திகரிப்பு அலகு ஆகியவற்றையும் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.