FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் செப்.16-இல் ட்ரோன்கள் பறக்க தடை

14 செப்டம்பர் 2026, 2:58 am IST
ட்ரோன் - பிரதிப் படம்
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக செப்.16-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சியில் வைக்கப்படும் பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, செப். 16-ஆம் தேதி காவிரி ஆற்றில் கரைக்கப்படும். எனவே, விழாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை (செப்.16) ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது.

புதன்கிழமை காலை தொடங்கி இரவு முழுவதும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments