FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

86 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

48 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருச்சி மலைக்கோட்டையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 86 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற காந்திமாா்க்கெட் தையல்காரத் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் (36) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 86 கிலோ புகையிலைப் பொருள்கள், கைப்பேசி, ரூ. 19 ஆயிரத்து 700 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments