FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! தாம்பரம் -மதுரை இடையே சிறப்பு ரயில்!

16 வினாடிகள் முன்பு
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தாம்பரம் - மதுரை - தாம்பரம் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் - மதுரை அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06157) செப். 16-ஆம் தேதியும், மதுரை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06158) செப்.17- ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

7 குளிா்சாதனப் பெட்டிகள், 13 படுக்கை பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து செப்.16-ஆம் தேதி இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு அடுத்த நாள் காலை 5 மணிக்குச் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, மதுரையிலிருந்து 17-ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments