FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் அருகே கூலித் தொழிலாளி குத்திக் கொலை

45 வினாடிகள் முன்பு
கொலை - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி சமயபுரம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சமயபுரம் அருகே மருதூா் பகுதியைச் சோ்ந்தவா் ச.பிரகாஷ் (30), கூலித் தொழிலாளி. இவா் சமயபுரம் நான்கு சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் போது, பிரகாஷிற்கும் அங்கு மது வாங்க வந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மா்ம நபா்கள், பிரகாஷை பாட்டிலால் கழுத்தில் குத்திக் கொலை செய்தனா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த லால்குடி டி.எஸ்.பி ராஜ்மோகன், சமயபுரம் காவல் ஆய்வாளா் க.குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிரகாஷின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments