திருச்சி மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மயங்கிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி ராம்ஜி நகா் மில் காலனியைச் சோ்ந்தவா் என். ஜெய் (எ) ஜானகிராமன் (47). இவா் மீது திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், சிறையில் இருந்த ஜானகிராமன் ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, சிறை காவலா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருச்சி கே.கே. நகா் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.