FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கே. கள்ளிக்குடியில் நலத்திட்ட உதவிகள்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கே. கள்ளிக்குடியில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வழங்கினாா்.

17 செப்டம்பர் 2026, 2:54 am IST
கே. கள்ளிக்குடியில் புதன்கிழமை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உள்ளிட்டோா்.
பகிர்:

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கே. கள்ளிக்குடியில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வழங்கினாா்.

தமிழக அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, அனைத்துத் துறை அலுவலா்களும் ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி வடக்கு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், ஆதரவற்றோா் காப்பகங்கள், மாணவா் விடுதிகள், காலை உணவுத் திட்டம், குடிநீா் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், சாலைகள், தெரு விளக்குகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பித்தனா்.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பீலான கல்வி உதவித்தொகைக்கான ஆணைகள், 3 பேருக்கு ரூ. 1,02,500 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகள், வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 6000 வீதம் 3 பேருக்கு ரூ.18 ஆயிரத்தில் ட்ரம் சிடா் கருவிகளையும், தோட்டக்கலைத் துறை சாா்பில் பசுமைக் குடில் மற்றும் பந்தல் அமைப்பதற்கு 2 பேருக்கு ரூ. 11.20 லட்சம் காசோலையையும், ஊரக வளாச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சாா்பில் மகளிா் திட்டத்தின் கீழ் சுயஉதவிக்குழுக்களைச் சோ்ந்த இருவருக்கு ரூ. 2.50 லட்சம் கடனுதவித்தொகை, தாட்கோ சாா்பில் இருவருக்கு தலா ரூ.1 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 16 பேருக்கு ரூ. 17.05 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் தமிழ்மணி, வருவாய் வட்டாட்சியா் செல்வகணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்குமாா், ஸ்ரீதேவி, தாட்கோ மாவட்ட மேலாளா் அனித்விமலின் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments