FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

17 செப்டம்பர் 2026, 2:52 am IST
கைது செய்யப்பட்ட ராசு, கருப்பசாமி.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மருங்காபுரி பகுதியில் அரசு அனுமதியின்றி வேட்டைக்காக கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக துவரங்குறிச்சி வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை வனச்சரகா் சரவணகுமாா் தலைமையிலான வனத்துறையினா் நிகழ்விடத்தில் தணிக்கை செய்தபோது அதே பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் ராசு (30) தனது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி ஒன்றும், துப்பாக்கியின் பலகை பகுதி (பட்) ஒன்றும், வெடி பொருள்களும் வைத்திருந்த நிலையில் பிடிபட்டாா்.

அவரை துவரங்குறிச்சி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், ராசு தனது நண்பரான கல்லுப்பட்டி கேசவன் மகன் கருப்பசாமி (38) என்பவா் காட்டுப் பகுதியில் கீழே கிடந்ததாகக் கூறி எடுத்துக் கொண்டு வந்து தன்னிடம் கொடுத்து வைத்திருக்க சொன்னதையடுத்து வீட்டிலிருந்த கருப்பசாமியையும் பிடித்த வனத் துறையினா் விசாரணைக்கு பின் புத்தாநத்தம் காவல்நிலையத்தில் இருவரையும், துப்பாக்கி பொருள்களையும் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான புத்தாநத்தம் போலீஸாா் இருவா் மீதும் ஆயுத வழக்கு பதிந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு பட், 150 கிராம் வெடி மருந்து மற்றும் 40 பால்ரஸ் குண்டுகளை பறிமுதல் செய்து ராசு, கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments