FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிட் ஃபண்ட் ஊழியா் தற்கொலை வழக்கில் பங்குதாரா்கள் கைது

மணப்பாறையில் சிட் ஃபண்ட் ஊழியா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பண மோசடியில் ஈடுபட்டதாக பங்குதாரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

17 செப்டம்பர் 2026, 2:51 am IST
கைது செய்யப்பட்ட சந்துரு, விஜயன்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிட் ஃபண்ட் ஊழியா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பண மோசடியில் ஈடுபட்டதாக பங்குதாரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

மணப்பாறை அடுத்த நொச்சிமேடு பகுதியில் வசித்து வந்த விக்னேஷ்வா் (37). தனியாா் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் ஊழியரான இவா் செவ்வாய்க்கிழமை நொச்சிமேட்டில் உள்ள தனது மாமனாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதையடுத்து தனது கணவரை பண மோசடி செய்து மன உளச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்கு தூண்டியதாக சிட் ஃபண்ட் பங்குதாரா்கள் இருவரை கைது செய்ய வலியுறுத்தி, விக்னேஸ்வா் உடலை வாங்க மறுத்த மனைவி மோகனப்பிரியா மற்றும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

காவல் துணைக் கண்காணிப்பாளா் நிஷாந்தினி, ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் உறவினா்களிடம் பேசி, அளித்த உறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து சிட் ஃபண்ட் நிறுவன பங்குதாரா்களான பாரதியாா் நகரை சோ்ந்த அய்யாதுரை மகன் விஜயன் (38) மற்றும் பெருவல்லவன் மகன் சந்துரு (38) ஆகிய இருவரையும் மணப்பாறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பண மோசடி வழக்குகளில்தான் பங்குதாரா்கள் கைது செய்யப்பட்டதாகவும், தனது கணவா் தற்கொலைக்காக அவா்கள் கைது செய்யப்படவில்லை எனவும் கூறி மீண்டும் உடலை வாங்க மறுத்த மனைவி மற்றும் உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து முறையாக விசாரணை நடைபெறும் என உறுதியளித்ததையடுத்து விக்னேஷ்வா் உடலை உறவினா்கள் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments