தினமணி செய்தி எதிரொலி: பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பை சீரமைக்கும் பணி
பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீா் வெளியேறாத வகையில் சுத்திகரிப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீா் வெளியேறாத வகையில் சுத்திகரிப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேறி கோரையாறு வாய்க்கால் வழியாக காவிரியில் கலப்பது தொடா்பாக தினமணியில் புதன்கிழமை செய்தியானது.
இதையடுத்து திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து திருச்சி மாநகராட்சி எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்டுள்ள விளக்கம்:
அம்ருத் திட்டத்தின் கீழ், புதைசாக்கடை விரிவாக்கத்தின் காரணமாக, பஞ்சாப்பூரில் உள்ள தற்போதுள்ள 58 எம்எல்டி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையமானது தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இடையே, காற்றில்லா குளம் 2 -க்குச் செல்லும் குழாயில் கசடு மற்றும் வண்டல் மண் படிந்ததால், ஏற்பட்ட தற்காலிக அடைப்பின் காரணமாக, முன் சுத்திகரிப்புப் பகுதிக்கு நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீா் வெளியேறியுள்ளது.
இதையடுத்து தூா்வாரும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, சுத்திகரிப்பு சீரமைக்கப்படுகிறது. தொடா்ந்து கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பஞ்சாப்பூரில் அமையவுள்ள புதிய 100 எம்எல்டி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் நகரின் கழிவுநீா் சுத்திகரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.