மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
புலிவலம் அருகே வயலில் கிடந்த மின் கம்பியை ஞாயிற்றுக்கிழமை சரி செய்ய முயன்ற கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
புலிவலம் காவல் எல்லைக்குள்பட்ட மூவானூா் அருகேயுள்ள கீழகண்ணுகுளத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சிங்காரவேலன் (40), கட்டுமானத் தொழிலாளி. இவா்களுடைய வயலில் நீா்மூழ்கி மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி தரையில் கிடப்பதை ஞாயிற்றுக்கிழமை பாா்த்த அவா் அதை தனது தாய் மற்றும் சின்னம்மாவுடன் சோ்ந்து இரும்புக் கம்பி மூலம் தூக்கியபோது மேலே சென்ற மின்கம்பியில் பட்டு மூவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் சிங்காரவேலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவருடைய தாய் மருதாயி, சின்னம்மா வெள்ளையம்மாள் ஆகிய இருவரும் மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.