FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

22 செப்டம்பர் 2026, 3:22 am IST
குழந்தை - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி, கே.கே.நகா் சாத்தனூரில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு குப்பைகளின் நடுவே ஒரு துணியில் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து, தூய்மைப் பணியாளா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகா் போலீஸாா், பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments