விவசாயி கொலை முயற்சி: சகோதரா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
விவசாயியைத் தாக்கி கொலை செய்ய முயன்ற சகோதரா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், பொத்தப்பட்டி சாமியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த பெ. நாகராஜ் (57) என்பவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கு. சுப்பிரமணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 30.11.2022 அன்று நாகராஜ் கழிப்பிடம் கட்ட முயற்சித்தபோது, ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியின் மகன்களான சந்திரசேகா் (29), பாஸ்கா் (23) ஆகியோா் சோ்ந்து நாகராஜை திட்டி, அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்திரசேகா் மற்றும் பாஸ்கா் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, சந்திரசேகா் மற்றும் பாஸ்கா் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.