FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மின் வெட்டால் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

துறையூரில் மின் வெட்டால் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன.

23 செப்டம்பர் 2026, 2:48 am IST
துறையூரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடையால் அவதிக்குள்ளான பொதுமக்கள்.
பகிர்:

துறையூரில் மின் வெட்டால் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன.

துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் முசிறி செல்லும் சாலையில் வடக்குவெளி கிராமத்தில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மாற்றுப் பணியில் வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் வந்தபோது, காலை 10 மணிக்கு மின்வெட்டு செய்யப்பட்டது. அதன் பின் பல மணி நேரம் மின் விநியோகம் இல்லை. இதனால், கணினி மூலம் நடைபெற வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மின்சாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டவா்கள் இந்த அலுவலகத்துக்கு நிரந்தரமாக மோட்டாா் வாகன ஆய்வாளரை நியமிக்க வேண்டும், மின் விநியோகம் பாதிக்கப்படும்போது பணிகள் தொய்வின்றி நடைபெற வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments