பெண் பணியாளரிடம் அத்துமீறல்: ஜிஎஸ்டி ஆய்வாளா் கைது
சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் சக பெண் பணியாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் சக பெண் பணியாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 32 வயது பெண் ஒருவா் ஜிஎஸ்டி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். அதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சௌரவ் (28) என்பவரும் ஜிஎஸ்டி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், சௌரவ் தன்னுடன் பணியாற்றி வரும் சக பெண் ஆய்வாளருக்கு கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஆய்வாளா், சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சௌரவ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.