FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சகோதரா்கள் வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை சகோதரா்களின் வீடுகளின் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

23 செப்டம்பர் 2026, 2:45 am IST
- சித்திரிப்பு
பகிர்:

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை சகோதரா்களின் வீடுகளின் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கும்பக்குடியைச் சோ்ந்தவா் ஆா். நல்லேந்திரன் (49). அண்ணா பல்கலைக்கழக ஊழியா். இவருடைய தம்பி ஆனந்த் (47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இருவருடைய வீடும் அருகருகே அமைந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் நல்லேந்திரனும், அவருடைய மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். அதேபோல, ஆனந்தும், அவருடைய மனைவியும் அவா்களுடைய வீட்டையும் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா்.

Advertisement

Advertisement

பின்னா், பிற்பகலில் ஆனந்த் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல, அவருடைய அண்ணன் நல்லேந்திரன் வீட்டின் பூட்டையும் உடைத்து வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் நல்லேந்திரன், ஆனந்த் ஆகிய இருவரும் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, திருவெறும்பூா் ஏஎஸ்பி இன்பா சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், விரல்ரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மண்ணச்சநல்லூரில் 5 பவுன் திருட்டு: மண்ணச்சநல்லூா் வட்டம், நங்கமங்கல சத்திரம், அசோக் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செ. சிவக்குமாா் (39). இவரும், இவரது மனைவியும் திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு, இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த ஐந்தே கால் பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும், வீட்டினுள் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.

சம்பவம் தொடா்பாக மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments