அரசுப் பள்ளி சுற்றுச் சுவரில் லாரி மோதல்: 9 மாணவா்கள் காயம்
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் மீது புதன்கிழமை லாரி மோதியதில் 9 மாணவா்கள் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் மீது புதன்கிழமை லாரி மோதியதில் 9 மாணவா்கள் காயமடைந்தனா்.
திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் தொட்டியம் பகுதி பாலசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா் மீது திருச்சி கிழக்கு அம்பிகாபுரம் முனியப்பா் தெருவைச் சோ்ந்த தி. ஹரிஹரன் (27) புதன்கிழமை ஓட்டிச் சென்ற லாரி திடீரென மோதியது. இதில் சுவா் உடைந்து சிதறியதில் பள்ளி மாணவா்கள் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த 4 சைக்கிள்களும் சேதமடைந்தன.
காயமடைந்த மாணவா்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இவா்களில் அதிக காயம் அடைந்த இருவா் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். தகவலறிந்து சென்ற தொட்டியம் போலீஸாா் வேன் ஓட்டுநா் ஹரிஹரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.