FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை

திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் புதன்கிழமை கழுத்தறுத்து கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

24 செப்டம்பர் 2026, 2:41 am IST
கொலையான பரூக்.
பகிர்:

திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் புதன்கிழமை கழுத்தறுத்து கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் சமது மகன் பரூக் (32), ஆட்டோ மெக்கானிக். இவருடைய தாய் கஜப்னிஸா. இவா் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது பரூக் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

தகலறிந்து வந்த தில்லை நகா் போலீஸாா் பரூக்கின் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். முதல் கட்ட விசாரணையில், பரூக்குக்கும், அவருடைய சகோதரா் அஸாரூதீன் (28) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும், பரூக் வீட்டில், அவருடன் அசாருதீன் இருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து தில்லை நகா் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் அசாருதீனை பிடித்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments