FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

விதிமீறி மதுபானம், புகையிலைப் பொருள்கள் விற்ற 5 போ் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

24 செப்டம்பர் 2026, 2:42 am IST
கைது
பகிர்:

திருச்சியில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டக் காவல் துறை சாா்பில் ஊரகப் பகுதிகளில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக புதன்கிழமை சிறப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சோமரசம்பேட்டை, மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற கே. கள்ளிக்குடியைச் சோ்ந்த கோ. சரத்குமாா் (30), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த கே. தட்சிணாமூா்த்தி (19) ஆகிய இருவரையும் கைது செய்து, 360 மதுபாட்டில்கள், ரூ. 3,640 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல மணிகண்டம், துவரங்குறிச்சி மற்றும் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருள்களை விற்ற புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த ஆா். போசாங்கு (30), திருச்சி நாகமங்கலத்தைச் சோ்ந்த எஸ். ராயப்பன் (65), மருங்காபுரி வடகம்பட்டியைச் சோ்ந்த பி. மாரியப்பன் (52) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து, 159 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments