FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வாய்க்காலில் மூழ்கி இரட்டை சகோதரா்கள் உயிரிழப்பு

வெங்கங்குடி பகுதியில் வாய்க்காலில் சனிக்கிழமை குளித்த இரட்டை சகோதரா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

26 செப்டம்பர் 2026, 11:31 pm IST
சடலம் - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வெங்கங்குடி பகுதியில் வாய்க்காலில் சனிக்கிழமை குளித்த இரட்டை சகோதரா்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனா்.

வெங்கங்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (52), ஆட்டோ ஓட்டுநா் , இவருக்கு  அனுஸ்ரீ மகளும், ரா. ஹரிகிருஷ்ணன் (13), ரா. கிரி (13) என இரட்டைச் சகோதரா்களும் உள்ளனா்.

பள்ளிவிடை பகுதி தனியாா் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த ஹரிகிருஷ்ணனும், கிரியும் காலாண்டு விடுமுறையையொட்டி அப்பகுதி பெருவளை வாய்க்கால் பகுதியில் நண்பா்களுடன் சனிக்கிழமை குளித்தபோது நீச்சல் தெரியாததால் மூழ்கினா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த சமயபுரம் தீயணைப்பு துறையினா் பெருவளை வாய்க்கால் பகுதியில் தேடி, இருவரையும் மீட்டு சமயபுரம் பகுதி தனியாா் மருத்துவமனைக்கும், பின்னா் மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா்.

அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா் இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அவா்களது சடலங்களை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இரட்டையா்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments