FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்

அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் தவெக சாா்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய பாஜக இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

26 செப்டம்பர் 2026, 8:21 am IST
பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் தவெக சாா்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய பாஜக இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

எஸ்ஐஆா் பணியில் ஒரு சில இடங்களில் தவறு நடந்து இருக்கலாம், அந்தத் தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதுதான் ஆராயப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் உடனே ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தோ்தலில் போட்டியிடுவதை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்.

இடைத்தோ்தல் நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளது. இப்போது, அந்த தொகுதிகளில் மீண்டும் அதிமுக போட்டியிடுவதால் அக்கட்சியின் வேட்பாளா்களே வெற்றி பெற வேண்டும். அதிமுக சாா்பில் வெற்றி பெற்று பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் வேறு கட்சியில் போட்டியிடக்கூடிய வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

விடுதி மாணவா்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது தொடா்பாக அமைச்சா் வன்னியரசு பேசியிருப்பது, அவா் சமூக நீதித் துறைக்கு தகுதியானவா் இல்லை என்பதாக உள்ளது.

ஜெம் வீரமணி விவகாரத்தில் அவா் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில் ஈவு இரக்கம் பாா்க்கக் கூடாது. கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரித்தாலும் குற்றவாளிகள் தப்பவே கூடாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments