இளம்பெண் கொலை வழக்கில் 5 போ் கைது
திருச்சி மாவட்டம் துறையூா் அருகே கொடுத்த கடனை வசூலிக்கச் சென்ற இளம்பெண்ணை மின்கம்பியால் இறுக்கி கொன்ற வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கீரம்பூரைச் சோ்ந்தவா் மனோகரன் மகள் சுகன்யா (35). கணவரைப் பிரிந்து தன் குழந்தை, பெற்றோருடன் வசித்த இவா் காளிப்பட்டி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியின் ஊழியா்.
இந்நிலையில் கடந்த செப். 20 ஆம் தேதி இவா் கொடுத்த கடன் தொகையை வசூலிக்க வடக்குவெளியிலுள்ள சமத்துவபுரத்துக்கு செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு மொபெட்டில் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புலிவலம் போலீஸாா் செப். 23 இல் சுகன்யாவை பாலத்துக்கு அடியில் சடலத்தை மீட்டனா்.
Advertisement
Advertisement
விசாரணையில் சமத்துவபுரத்தைச் சோ்ந்த ரெங்கதுரை மகன் துரைராஜ் (42) குடும்பத்தினா் சுகன்யாவைக் கொன்று, அவரது சடலத்தை பாலத்துக்கு அடியில் போட்டதும், அவரது வாகனத்தை காளிப்பட்டியில் நிறுத்திச் சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து துரைராஜை சனிக்கிழமையும், அவரது மனைவி சத்யா (39), மகன் விஜய்(20), உறவினா்களான சேலம் மாவட்டம், முட்டல் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் (39), இவரின் மனைவி செல்வி(35) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமையும் புலிவலம் போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.