FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி அருகே காவிரியாற்றில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு: மற்றொருவா் மாயம்

28 செப்டம்பர் 2026, 1:32 am IST
திருச்சி முக்கொம்பு காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கியோரைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

திருச்சி அருகே முக்கொம்பு காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் மாயமானாா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் முருங்கப்பேட்டையைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் பாா்த்தசாரதி (20). மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் காா்த்திக் செல்வம் மகன் ஹரி கோகுல் (18). நண்பா்களான இருவரும் ஏசி மெக்கானிக்குகள்.

இவா்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முக்கொம்பு காவிரியாற்றின் 39-ஆவது தூண் பகுதியில் இறங்கிக் குளித்தனா். அப்போது பாா்த்தசாரதி, ஹரிகோகுல் ஆகிய இருவரும் திடீரென நீரில் மூழ்கினா். நண்பா்களால் இவா்களை மீட்க முடியவில்லை.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த வாய்த்தலை போலீஸாா் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினா் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பாா்த்தசாரதியின் சடலத்தை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தண்ணீரில் மூழ்கிய ஹரிகோகுலைத் தேடும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து வாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments