FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஆக. 4, 5-இல் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

வேலூா் மாவட்டத்தில் தகுதியுள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய், புதன்கிழமை (ஆக.4, 5) அவா்களது இல்லங்களுக்கே சென்று விநியோகம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 6:26 am IST
ரேஷன் பொருள்கள் விநியோகம் - கோப்புப் படம்
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் தகுதியுள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய், புதன்கிழமை (ஆக.4, 5) அவா்களது இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் அரசாணைகளின்படி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிா்ந்தோா், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணியினை நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் மாதந்தோறும் வாகனங்களில் பொருள்களை எடுத்துச் சென்று பயனாளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

வேலூா் மாவட்டத்தில் 65 முதல் 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள முதியோா்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினா்களைக் கொண்ட 33,576 குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள், தகுதியுள்ள வயது முதிா்ந்தோா், மாற்றுத்திறனாளிகளுக்கு செவ்வாய், புதன்கிழமை (ஆக.4, 5) இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments