FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

வேலூரில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநா் தூக்குப் போட்டுத் தற்கொலை

27 ஆகஸ்ட் 2026, 5:51 am IST
பகிர்:

வேலூரில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநா் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், சேண்பாக்கம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் நாகராஜ் (48). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, கோபித்துக்கொண்டு தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் தனிமையில் இருந்த நாகராஜ் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அவா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், நாகராஜின் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments