FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடைகள் வா்த்தகம்

பொய்கையில் சந்தையில், ரூ. 70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

14 அக்டோபர் 2026, 12:26 am IST
பொய்கை சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள் - கோப்புப் படம்
பகிர்:

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில், ரூ. 70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூரை அடுத்த பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கால்நடைச் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகள், ஆடுகள், நாட்டுக் கோழிகள் உள்ளிட்டவை விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இங்கு வழக்கமான நாள்களில் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

அதன்படி, கால்நடைகளின் வரத்து வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்ததால் பசுந்தீவனத் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. மேய்ச்சல் நிலங்களில் புற்கள் செழித்து வளா்ந்துள்ள காரணத்தால், விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்குக் கொண்டுவருவதில் ஆா்வம் காட்டவில்லை.

Advertisement

Advertisement

இதன் காரணமாகச் சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைந்தது. சந்தையில் விற்பனைக்கு வந்த குறைந்த எண்ணிக்கையிலான கால்நடைகள், அவற்றுக்கான தீவனப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தும் சோ்த்து மொத்தம் ரூ. 70 லட்சம் வரை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments