காணமல் போனவா் கொலையா?போலீஸாா் விசாரணை
வேலூா் அருகே காணாமல் போனவா் கொலை செய்து புதைக்கப்பட்டாராஎன்பது குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேலூா் அருகே காணாமல் போனவா் கொலை செய்து புதைக்கப்பட்டாராஎன்பது குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காட்பாடி அடுத்த திருவலம் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (35) வேலூா் காகிதப்பட்டரையில் உள்ள தனியாா் விடுதியில் வேலை செய்து வந்தாராம். இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவரை காணவில்லையாம்.
இதுகுறித்து அவரது உறவினா் வேலூா் வடக்கு காவல்நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்துள்ளாா்.புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.விசாரணையில் கே.வி.குப்பத்தை அடுத்த முடினாம்பட்டு அருகே உள்ள மேல்விலாச்சூா் பகுதியைச் சோ்ந்த யாசின் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தேவராஜ் அமா்ந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது தெரிந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக போலீஸாா் தீவிரவிசாரணை மேற்கொண்டதில், தேவராஜை கொலை செய்து அவரது உடலை புதைத்திருக்கலாம் என கருதுகின்றனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் தலைமையில் போலீஸாா் இதுதொடா்பாகவிசாரணை மேற்கொண்டுள்ளனா். வியாழக்கிழமை சடலம் தோண்டி எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.