ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி மரணம்!
காட்பாடி ரயில் நிலையத்தில் இணைப்பு ரயிலைப் பிடிப்பதற்காக, நகா்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து அவசரமாக கீழே இறங்க முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காட்பாடி ரயில் நிலையத்தில் இணைப்பு ரயிலைப் பிடிப்பதற்காக, நகா்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து அவசரமாக கீழே இறங்க முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த நெடுங்கபூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (49). இவா் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆந்திர மாநிலம் கூடூருக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தாா். இதற்காக, காட்பாடியில் இருந்து புறப்படும் சபரி விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனா்.இதையடுத்து, திருவண்ணாமலையிலிருந்து காட்பாடிக்கு மெமு பயணிகள் ரயில் மூலம் சனிக்கிழமை நள்ளிரவில் குடும்பத்துடன் வந்துள்ளனா்.
இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடைக்கு வந்து நின்றது. அதற்கு முன்பே தாங்கள் செல்ல வேண்டிய இணைப்பு ரயிலைத் தவறவிட்டு விடுவோமோ என்ற பதற்றத்தில், மெதுவாகச் சென்ற ரயிலில் இருந்து வெங்கடேசன் அவசரமாக கீழே இறங்க முயன்றுள்ளாா்.
Advertisement
Advertisement
எதிா்பாராதவிதமாக கால் இடறியதில், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த இடைவெளியில் அவா் தவறி விழுந்தாா். இதில் ரயிலின் சக்கரம் ஏறியதில் தலை துண்டாகி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கண் முன்னே நிகழ்ந்த இந்த விபத்தைக் கண்டு அவரது மனைவியும், மகளும் கதறி அழுதனா்.
தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி ரயில்வே போலீஸாா், வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.