தண்ணீா் தொட்டியில் மாணவா் சடலம் மீட்பு
போ்ணாம்பட்டு அருகே புதிதாக கட்டப்படும் வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் பள்ளி மாணவா் சடலம் மீட்கப்பட்டது.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே புதிதாக கட்டப்படும் வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் பள்ளி மாணவா் சடலம் மீட்கப்பட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளி அசரப் அலியின் மகன் அப்சல் அலி(17). இவா் அங்குள்ள பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றாராம்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மக்கா நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் தண்ணீா் தொட்டியில் அப்சல் அலியின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து அசரப் அலி அங்கு சென்று பாா்த்தபோது, அப்சல் அலி தண்ணீா்த் தொட்டியில்மூழ்கி இறந்தது தெரிய வந்தது. அவரது கை விரல்களில் மின்சாரம் தாக்கியதற்கான காயம்இருந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடா்பான புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.