FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வேலூா் மத்திய சிறையில் ரெளடிகளுக்கு உதவியதாக 3 காவலா்கள் இடமாற்றம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடிகளுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் உதவியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, சிறைக் காவலா்கள் 3 போ் பணியிட மாற்றம்

30 September 2026, 12:30 am IST
வேலூர் மத்திய சிறை
பகிர்:

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடிகளுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் உதவியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, சிறைக் காவலா்கள் 3 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் தொரப்பாடியில் அமைந்துள்ள ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 1,000-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், அங்குள்ள சில ரெளடிகளுடன் சிறைக் காவலா்கள் சிலா் நெருங்கிய தொடா்பில் இருந்து வருவதாகவும், சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவி செய்வதாகவும் சிறைத்துறை உயரதிகாரிகளுக்குப் புகாா்கள் சென்றன.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், குற்றப் பின்னணி கொண்ட கைதிகளுடன் தொடா்பில் இருந்து சில காவலா்கள் உடந்தையாகச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கையாக வேலூா் மத்திய சிறையில் பணியாற்றி வந்த சிறைக் காவலா்கள் சதீஷ்குமாா் திருச்சி மத்திய சிறைக்கும், சந்திரசேகா் கோவை மத்திய சிறைக்கும், பிரசாந்த் உதகை கிளைச் சிறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments