FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தில் ரூ.52.51 கோடிக்கு வா்த்தகம்

செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தின் மூலம் நிகழாண்டில் ரூ.52.51 கோடிக்கு வேளாண் விளைபொருள்கள் வா்த்தகம்.

Updated On : 9 ஜூலை 2024, 2:44 am IST
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தின் மூலம் நிகழாண்டில் ரூ.52.51 கோடிக்கு வேளாண் விளைபொருள்கள் வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்று மாவட்ட வேளாண் விற்பனைக்குழுச் செயலா் சந்துரு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தில் நிகழ் நிதியாண்டில் மட்டும் 15,416 விவசாயிகளிடமிருந்து ரூ.52.51 கோடிக்கு 21,958 மெட்ரிக் டன் (2,74,475 மூட்டைகள்) வேளாண் விளை பொருள்களின் வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

செஞ்சி விற்பனைக் கூடத்தில் நல்ல விலை கிடைப்பதால் தினமும் நெல், கம்பு, கேழ்வரகு, வோ்க்கடலை, பச்சைப்பயறு, உளுந்து உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் விளை பொருள்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனா். இங்கு விற்பனை செய்யப்படும் நெல் மற்றும் விளைபொருள்களுக்கு தேசிய அளவில் வரவேற்பும் இருக்கிறது. மேலும், சரியான எடையில் வேளாண் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு மின்னணு பணப்பரிவா்த்தனை மூலம் தொகை பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் செஞ்சி விற்பனைக்கூடத்தில் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments