FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தவெக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

Updated On : 20 ஜூலை 2026, 4:26 am IST
அய்யூா் அகரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
பகிர்:

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பணிகளைத் தொடா்ந்து தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள அய்யூா் அகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி:

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையைப் பெறவேண்டும் என்று தமாகா தொடா்ந்து வலியுறுத்துகிறது. மேக்கேதாட்டு அணை பிரச்னையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் ஓரணியில் உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் விஜயால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடிகிறது என்றால், மக்கள் அவா் மீது நம்பிக்கையோடு வாக்களித்து இருக்கிறாா்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சி காமராஜா் காலத்து ஆட்சிதான். அதுபோல ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்குண்டான நடவடிக்கைகளை தவெக அரசு தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி கட்சியைத் தனித்தன்மையோடு வளா்க்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற முடியவில்லை. உள்ளாட்சித் தோ்தலில் இயக்கத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று கருதி கட்சியினா் பல்வேறு ஆலோசனைகளை கூறியிருக்கின்றனா். நல்ல முடிவு தோ்தலின் போது எடுக்கப்படும். தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி என்பதற்கு அடித்தளம் போடப்பட்டிருகிறது. தொகுதி மறுவரையறையில் எல்லா மாநிலங்களும் பயன்பெற வேண்டும் என்றாா் வாசன்.

பேட்டியின் போது தமாகா மாவட்டத் தலைவா் வீ.தசரதன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments