விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விழுப்புரம் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் வந்த மிரட்டலைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.
சுமாா் 3 மணி நேரதுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement